பொங்கல் பண்டிகையையொட்டி மஞ்சள் விளைச்சலில் பொள்ளாச்சி பகுதிகளில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். பொங்கல் பண்டிகைக்காக கவுண்டம்பாளையம் பகுதியில் மஞ்சள் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். மஞ்சள் நீண்டகால பயிர் மற்றும் எளிதில் நோய் தாக்க கூடியது என கூறும் விவசாயிகள், போதுமான அளவு தண்ணீர் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்கின்றனர்.
முன்பெல்லாம் பல ஏக்கரில் மஞ்சள் சாகுபடி செய்யப்பட்டு வந்த மஞ்சள், இதுபோன்ற காரணங்களால் சாகுபடி செய்வோர் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளதாக தெரிவிக்கின்றனர். இந்தநிலையில், பொங்கல் பண்டிகையின் போது முக்கிய பொருளாக மஞ்சள் கொத்து விளங்குவதால், அதிகளவில் மஞ்சள் பயிரிட்டுள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர்.