திமுகவின் இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்றுள்ளது மூலம் திமுக இன்னும் வாரிசு அரசியலை உயர்த்திப் பிடிப்பது உறுதியாகியுள்ளது. உதயநிதி ஸ்டாலின் திமுக இளைஞரணி செயலாளராக பதவியேற்றுள்ளார். திமுக மீது தொடக்கத்தில் இருந்தே வாரிசு அரசியல் குற்றச்சாட்டு இருந்து வருகிறது. கருணாநிதி 1980ல் ஸ்டாலினை திமுக இளைஞரணியின் ஒரு அமைப்பாளராக்கியதில் தொடங்கிய வாரிசு அரசியல், அவரை மேயராக்கி, பின்னர் 2006ல் தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சராக்கியதில் வலுப்பெற்றது.
2009ஆம் ஆண்டில் தமிழக வரலாற்றில் முதன்முறையாக ‘துணை முதல்வர்’ – என்ற பதவியை உருவாக்கிய கருணாநிதி அதையும் ஸ்டாலினுக்கே கொடுத்தார். 2017ல் திமுகவின் செயல் தலைவராக்கப்பட்ட ஸ்டாலின், கருணாநிதியின் மறைவுக்குப் பின்னர் திமுகவின் அடுத்த தலைவரானார். இந்த நிலையில் திமுகவின் இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் தற்போது பதவி ஏற்றுள்ளது, திமுக உறுப்பினர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.