ராஜஸ்தான், தெலங்கானாவில் நாளை மறுநாள் சட்டப்பேரவை தேர்தல் -இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரம்

ராஜஸ்தான் மற்றும் தெலங்கானாவில் இன்று மாலையுடன் சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரம் ஓயவுள்ள நிலையில், இறுதிகட்ட பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஷ்கர் மற்றும் மிசோராமில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வருகிறது. சத்தீஷ்கர், மத்திய பிரதேசம் மற்றும் மிசோரத்தில் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், ராஜஸ்தான் மற்றும் தெலங்கானாவில் நாளை மறுநாள் தேர்தல் நடைபெறவுள்ளது.

ஐந்து மாநில தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை தேர்தலுக்கான அரையிறுதிப் போட்டி என்று கருதப்படுவதால், தேர்தல் முடிவுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன.

இந்நிலையில், ராஜஸ்தான், தெலங்கானா மாநிலங்களில் இன்று மாலையுடன் 5 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது.

இந்த மாநிலங்களில், அரசியல் கட்சித் தலைவர்கள் அனல்பறக்கும் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளனர். தேர்தலையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன.

 

Exit mobile version