முதலமைச்சரின் வெளிநாடு பயணத்திற்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து

பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்திராராஜன், முதலமமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், முதலமைச்சருக்கு தொலைபேசி வாயிலாக தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். முதலமைச்சரின் பயணம் வெற்றி பெற தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பயணம் வெற்றி பெற தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், தேமுதிக மாநில துணை செயலாளர் எல்.கே.சுதீஸ் ஆகியோர் முதலமைச்சரை நேரில் சந்தித்து வாழ்த்து கூறினார்.

Exit mobile version