பெரியார் விருது குறித்த ஸ்டாலினின் குற்றச்சாட்டு, அவரது அறியாமையை காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பெரியார் விருது, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பிலும், அம்பேத்கர் விருது ஆதி திராவிடர் நலத்துறை சார்பிலும் வழங்கப்படுகிறது. ஆனால் திமுக தலைவர் ஸ்டாலின், தமிழ் வளர்ச்சித் துறை சார்பாக பெரியார் விருது வழங்கப்படுவதாகவும், அது முறைப்படி அறிவிக்கப்படவில்லை என்றும் பொய்யான குற்றச்சாட்டை கூறியிருந்தார். ஸ்டாலினின் இந்த பொய்யான குற்றச்சாட்டிற்கு அரசியல் விமர்சகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மேலும், தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் இவ்விருதுகள் வழங்கப்படாது என்பது கூட தெரியாமல், திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டியிருப்பது பொது மக்களிடமும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. துணை முதல்வராக இருந்த ஸ்டாலினுக்கு இந்த அடிப்படை விவரம் கூட எப்படி தெரியாமல் போனது என்பதே அனைவரின் சந்தேகமாக உள்ளது.
பெரியார் விருது தொடர்பாக கடந்த 10 ஆம் தேதியும், அம்பேத்கர் விருது தொடர்பாக கடந்த 9 ஆம் தேதியும் அரசாணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், ஸ்டாலின் இவ்வாறு பொய் குற்றச்சாட்டு சுமத்தி வருவது ஏன் என்பது தெரியவில்லை என அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.