மார்ச் 3ம் தேதி போலியோ சொட்டுமருந்து முகாம்

தமிழகம் முழுவதும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு மார்ச் மாதம் 3ம் தேதி போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. ஆரம்ப சுகாதார மையங்கள், அரசு மருத்துவமனைகள்,அங்கன்வாடி மையங்கள்,சத்துணவு மையங்கள்,பள்ளிகள் உள்ளிட்ட முக்கியமான இடங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்ட உள்ளது. அதன்படி அன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை தமிழகம் முழுவதும் 43 ஆயிரத்து 51 மையங்கள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்து நிலையங்கள், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், சுங்கச்சாவடி போன்ற இடங்களிலும் போலியோ சொட்டு மருந்து வழங்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. மேலும் ஆயிரம் நடமாடும் குழுக்கள் மூலம் எளிதில் செல்ல முடியாத பகுதிகளுக்கும் சென்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.

ஓரிரு நாட்களுக்கு முன்னர் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும் மீண்டும் சொட்டு மருந்து எடுத்துக் கொள்ளலாம். புதிதாக பிறந்த குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து கொடுப்பது அவசியமாகும்.

Exit mobile version