தமிழகத்தில் மார்ச் 10ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் அறிவிப்பு

தமிழகம் முழுவதும் மார்ச் 10ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் போலியோவை ஒழிப்பதற்காக கடந்த 1994-ம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களில் இரண்டு தவணையாக 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. இதனால் போலியோ முற்றிலுமாக ஒழிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது. இந்த ஆண்டும் தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்துவதற்கான பணிகள் நடைபெற்றது. இந்த நிலையில், தமிழகத்தில் மார்ச் 10ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

Exit mobile version