தமிழகத்தில் வரும் 31ம் தேதி நடைபெறும் போலியோ சொட்டு மருந்து முகாமினை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெடங்கி வைப்பார் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சி.விஜயபாஸ்கர், பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் காவல்துறை, உள்ளாட்சித்துறை மற்றும் வருவாய்த்துறையை சேர்ந்த முன்களப் பணியாளர்களும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என தெரிவித்தார். தமிழத்தில் வரும் 31ம் தேதி நடைபெறும் போலியோ சொட்டு மருந்து முகாமை, சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைப்பார் என்றும் அமைச்சர் தெரிவித்தார். கடந்த 17 ஆண்டுகளில் தமிழகத்தில்
போலியோவால் ஒரு குழந்தை கூட பாதிக்கப்படவில்லை எனவும் அமைச்சர் விஜயபாஸ்கர் அப்போது பெருமிதம் தெரிவித்தார்.