கடலூர் அருகே பாதுகாப்பின்றி வைக்கப்பட்டிருந்த வெடிபொருளை காவல்துறையினர் கைப்பற்றினர்.
கடலூர் – பெரம்பலூர் மாவட்ட எல்லையில் பாடலூரில் உள்ள கல்குவாரியில் உரிய பாதுகாப்பின்றி 2 ஆயிரத்து 400 ஜெலட்டின் ஜெல் என்ற வெடிப்புகளும், அதனை வெடிக்கப் பயன்படும் 950 எலக்ட்ரிக் டெட்டனேட்டர்களும் இருப்பதாக, நுண்ணறிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இத்தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், அங்கு வைக்கப்பட்டிருந்த அனைத்து வெடிபொருட்களையும் பறிமுதல் செய்து ராமநத்தம் காவல்நிலைய ஆய்வாளரிடம் ஒப்படைத்தனர். பின் அது பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும் பாதுகாப்பின்றி வெடிபொருட்களை வைத்திருந்த மணி, காவல்துறையினர் தீவிர சோதனை செய்தனர்.