ரஜினியின் இல்லத்திற்கு போலீஸ் பாதுகாப்பு

நடிகர் ரஜினிகாந்த் வீட்டை முற்றுகையிடப் போவதாக தந்தை பெரியார் திராவிடர் கழகம் அறிவித்தை தொடர்ந்து, போயஸ் தோட்டத்தில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டை சுற்றி பலத்த  பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கடந்த 14ஆம் தேதி துக்ளக் இதழின் 50-வது ஆண்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், தந்தை பெரியார் குறித்து அவதூறாக பேசினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் ரஜினி மீது பல்வேறு தரப்பினரும் காவல்நிலையத்தில் புகார் அளித்து வருகின்றனர்.

 ரஜினிகாந்தை கைது செய்யவேண்டும் என்றும் பெரியார் இயக்கங்கள் வலியுறுத்தி வருகின்றனர்.. இந்நிலையில் ரஜினிகாந்த், பெரியார் குறித்த கருத்திற்காக மன்னிப்பு கேட்க முடியாது எனவும், பத்திரிகையில் வந்த செய்தியை தான், தாம் தெரிவித்ததாகவும் கூறினார்.  இந்த நிலையில், தந்தை பெரியார் திராவிடர் கழகம் ரஜினிகாந்த் வீட்டை முற்றுகையிடப்போவதாக அறிவித்திருத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்தின் போயஸ் தோட்டத்திற்கு காவல்துறையினர் சார்பில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Exit mobile version