மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த காவல்துறையினர் அணிவகுப்பு

நாடாளுமன்ற தேர்தல் வரும் 18 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், காவல் துறையினர் உதகையின் முக்கிய வீதிகளில் துப்பாக்கியுடன் கொடி அணி வகுப்பு ஊர்வலத்தை நடத்தினர்.

18 ஆம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை அமைதியான முறையில் நடத்த, பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் ஆணையமும், காவல் துறையும் செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, வாக்களிப்பதற்கு பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்பதை எடுத்துரைக்கும் வகையில், நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா தலைமையில் துணை ராணுவப்படையினர், அதிரடிப்படையினர், உள்ளூர் காவல் துறையினரின் அணிவகுப்பு நடைபெற்றது.

Exit mobile version