மதுரை மத்திய சிறையில், உதவி ஆணையர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
மதுரை மத்திய சிறைச்சாலையில், விதிகளை மீறி சட்டவிரோதமாக போதைப்பொருட்கள் மற்றும் செல்போன் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்துகிறார்களா என்பது குறித்து திடீர் சோதனை நடத்தப்பட்டது. மதுரை சரக சிறைத்துறை துணைத் தலைவர் தலைமையில், சிறைத்துறை கண்காணிப்பாளர் முன்னிலையில், நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் காலையில் சோதனை நடத்தினர். பெண் கைதிகள் உட்பட ஆயிரத்து 300 கைதிகளின் அறைகள், வளாகங்கள், உணவு தயாரிக்கும் பகுதிகள், கைதிகள் மற்றும் சிறை அலுவலர்கள் பயன்படுத்தப்படும் அறைகள், கழிவறைகள் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது. சோதனையின் முடிவில், தடைசெய்யப்பட்ட பொருட்கள் ஏதும் கைப்பற்றப்படவில்லை என காவல்துறை தரப்பில் விளக்கமிக்கப்பட்டுள்ளது.