தமிழகத்தில் இரவு பொது முடக்கம் அமலான நிலையில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு

தமிழகத்தில் இரவு பொது முடக்கம் அமலான நிலையில் சென்னையில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.

கொரோனா பரவலைக்கட்டுப்படுத்தும் வகையில் அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் நேற்று முதல் இரவு 10 மணி தொடங்கி அதிகாலை 4 மணி வரை பொதுமுடக்கம் அமலுக்கு வந்தது.

அரசின் கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றி, கடைகள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்டவற்றை 9 மணிக்கே வியாபாரிகள் அடைக்கத் தொடங்கினர்.

நுங்கம்பாக்கம், தியாகராயநகர் உள்ளிட்ட சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டன.

இதே போல் அரசு மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து, வாடகை கார், ஆட்டோ மற்றும் தனியார் வாகனங்களும் இரவு 10 மணிக்கு மேல் இயங்க அனுமதிக்கப்படவில்லை.

சென்னை மெரினா கடற்கரை மற்றும் அண்ணாசாலை உள்பட சென்னையின் அனைத்து பகுதிகளிலும் காவல்துறையினர் சாலைகளை மறித்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

10மணிக்கு பிறகு வாகனத்தில் வந்தவர்களை விசாரித்தும், எச்சரித்தும், அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

 

 

Exit mobile version