தேர்தல் பாதுகாப்பை வலியுறுத்தும் விதமாக காவல்துறையினர் அணிவகுப்பு

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் தேர்தல் பாதுகாப்பை வலியுறுத்தும் விதமாக காவல்துறையின் அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது.

தமிழகத்தில் வரும் 18ஆம் தேதி நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அந்தவகையில், தமிழக காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பான தேர்தலை நடத்தும் விதமாக இணை காவல் கண்காணிப்பாளர் ராமநாதன் அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது. இதில், காவல்துறையை சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Exit mobile version