காவலர் காதல் ஜோடி தற்கொலை முயற்சி

திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில், காவலர் காதல் ஜோடி தற்கொலை முயற்சியில் காவலர் இன்று பரிதாபமாக உயிரிழந்தார்

திருச்சி மாவட்டம், துவாக்குடியில் ஜெயதேவன் மற்றும் செண்பகம் ஆகியோர் காவலர்களாக பணியாற்றி வந்தனர். இந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. இருவருக்கும் திருமணம் நடைபெற இருந்த நிலையில் ஜெயதேவன், வயிற்றுப்புண் மற்றும் குடல் வால்வு நோய்க்கு சிகிச்சை பெற்று வந்தார். வயிற்று வலி தாங்க முடியாமல் கடந்த 28-ம் தேதி ஜெயதேவன், எலி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். திருச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயதேவனை செண்பகம் அருகில் இருந்து கவனித்துக்கொண்டார்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஜெயதேவன் இன்று உயிரிழந்தார்.காதலனின் பிரிவை தாங்க முடியாமல் மன வேதனையில் இருந்த காவலர் செண்பகமும் எலி மருந்து குடித்து விட்டார். அவரும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். சோகத்தை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம குறித்து திருவெறும்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version