பத்ம சேஷாத்ரி பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர் ராஜகோபாலன் பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தில், பள்ளி முதல்வர் கீதா இரண்டாவது நாளாக அசோக் நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.
பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வந்த புகாரை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனை அடுத்து போலீசாரால் கைது செய்யப்பட்ட அவர் 14 நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் பள்ளியில் உள்ள மற்ற ஆசிரியர்களையும் விசாரணை செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் பள்ளி முதல்வர் விசாரணைக்கு ஆஜராகுமாறு காவல்துறை சம்மன் அனுப்பியது.
இதையடுத்து பத்மா சேஷாத்ரி பள்ளியின் முதல்வர் கீதா, நேற்று அசோக் நகர் மகளிர் காவல் நிலையத்தில் ஆஜாரானார்.
அப்போது மானவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரின் வழக்கு குறித்து விசாரணை நடத்தப்பட்டது.
இந்த நிலையில், இரண்டாவது நாளாக காவல் நிலையத்தில் ஆஜரான பள்ளி முதல்வர் கீதாவிடன் போலீசார் 3 மணி நேரம் விசாரனை நடத்தினர்.