பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த போலீசார் நடிகை வணிதாவிடம் விசாரணை

ஆள் கடத்தல் வழக்கு தொடர்பாக பிக்பாஸ் வீட்டில் உள்ள நடிகை வனிதாவிடம் தெலுங்கானா மற்றும் நசரத்பேட்டை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திரைப்பட நடிகர் விஜயகுமாரின் மகள் நடிகை வனிதா. இவருக்கும் தெலுங்கானாவை சேர்ந்த ஆனந்ராஜ் என்பவருக்கும் 2007ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஜெனிதா என்கிற மகள் உள்ளார். இந்நிலையில், இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுப்பாட்டால் 2012 ஆம் ஆண்டு இருவருக்கும் நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது.

இதையடுத்து, மகள் ஜெனிதா தந்தை ஆனந்தராஜூடன் தெலுங்கானாவில் வசித்து வருகிறார். இந்நிலையில் தனது மகளை நடிகை வனிதா பள்ளிக்கு செல்லும் போது கடத்தி சென்றதாக முன்னாள் கணவர் ஆனந்தராஜ் நசரத்பேட்டை காவல் நிலையத்தில் தெலுங்கானா காவல் துறையினர் உதவியுடன் புகார் அளித்தார். இந்த கடத்தல் சம்பவம் குறித்து தெலுங்கானா மற்றும் நசரத்பேட்டை காவல் துறையினர் உதவியுடன் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்து நடிகை வனிதாவிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version