கொரோனா தடுப்பு பணியில் உயிரிழந்த காவல் ஆய்வாளர் பாலமுரளி படத்திற்கு மலரஞ்சலி!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மாம்பலம் காவல் ஆய்வாளர் பாலமுரளியின் உருவ படத்துக்கு காவல்துறை இயக்குனர் திரிபாதி, காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் உள்ளிட்டோர் மலரஞ்சலி செலுத்தினர்.கொரோனா தடுப்பு பணியில் தமிழக காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா தொற்றுக்கு எதிரான இந்த யுத்தத்தில் முனகள பணியாளர்களாக விளங்கும் காவல்துறையினரும் நோய் தொற்றுக்கு உள்ளாகி வருகின்றனர். அந்த வகையில் மாம்பலம் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு ஆய்வாளராக பணியாற்றி வந்த பாலமுரளி நோய் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் இரங்கல் தெரிவித்த நிலையில், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு தகுதி அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ஆய்வாளர் பாலமுரளி கடைசியாக பணியாற்றிய மாம்பலம் R 1 காவல் நிலைய வளாகத்திலலேயே அவரது திருவுருவப் படம் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் தமிழக காவல் துறை இயக்குனர் ஜே.கே திரிபாதி, உளவுத்துறை ஐ. ஜி ஈஸ்வரமூர்த்தி, சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் அவருடன் பணியாற்றிய சக காவலர்களும் அஞ்சலி செலுத்தினர்..

Exit mobile version