சிறையில் காவல்துறை உயர்அதிகாரிகள் தலைமையில் சோதனை

பாளையங்கோட்டை மத்திய சிறையில் போலீஸ் உயர் அதிகாரிகள் தலைமையில் சோதனை நடத்தப்பட்டது. சோதனையில் எந்தவித பொருட்களும் கைப்பற்றப்படவில்லை.

கடந்த சில மாதங்களுக்கு முன், தமிழகத்தில் உள்ள சிறைகளில் செல்போன், சிம்கார்டுகள் மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தடுக்கும் விதமாக, சிறைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு, 2 மாதங்களுக்கு ஒரு முறை அனைத்து சிறைகளிலும் கடும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை மத்திய சிறையில், காவல்துறை உதவி ஆணையர் பரமசிவம் தலைமையில், 50க்கும் மேற்பட்ட போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். ஆனால், இச்சோதனையில் எந்தவித பொருட்களும் கைப்பற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version