மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் திறக்கப்பட்ட நிலையில், சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
சபரிமலை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடையைத் திறந்து தீபாராதனை நடத்தினார். இதையடுத்து, 18ம் படிக்கு கீழ் உள்ள நெருப்பு ஆழியில் கற்பூரம் வைத்து தீ மூட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். பின்னர் இரவு 10 மணிக்கு நடைசாத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து இன்று அதிகாலை மீண்டும் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று ஐயப்பனை வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில் சபரிமலைக்கு வந்த 10 பெண்களை காவல்துறையினர் திருப்பி அனுப்பினர். பம்பையிலே அவர்களைத் தடுத்து நிறுத்திய காவல்துறையினர் மேற்கொண்டு செல்ல அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினர்.