மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகே ராஜாகூர் பகுதியில் 47 பேர் கொரானாவால் பாதிப்படைந்துள்ளதாகவும்,அவர்கள் அங்குள்ள வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வைத்து தனிமைபடுத்தப்பட்டுள்ளதாகவும், இதனால் அப்பகுதியினர் சாலை மறியலில் ஈடுபட்டு வருவதாகவும் கூறி , திருச்சி மாவட்டம் இலங்கனூரைச் சேர்ந்த செல்வம் என்பவர் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பும் வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார். இது குறித்து ராஜாகூர் கிராம நிர்வாக அலுவலர் ஆண்டாள் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் அவரை கைதுசெய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், வெளிநாடுகளிலிருந்து கொரானா அறிகுறியுடன் வரும் பயணிகளை தனிமைப்படுத்துவதற்காக, போதிய இடவசதியினை மாவட்ட நிர்வாகம் தேடி வரும் நிலையில் அதனை அவதூறாக வீடியோ வெளியிட்டது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் கைது செய்யப்பட்ட செல்வம் மீது தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், வதந்தியை பரப்புதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து ஒத்தக்கடை காவல்துறையினர் தொடர்ந்து,விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட 47 பேரை அடைத்து வைத்திருப்பதாக அவதூறு வீடியோ பரப்பியவரை போலீசார் கைது செய்தனர்!
-
By Web Team
Related Content
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!
By
Web team
September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!
By
Web team
September 27, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அடித்து ஆடும் அதிமுக! அடங்கிப்போன திமுக! பதற்றத்தில் பாஜக!
By
Web team
September 27, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அதிமுக - பாஜக கூட்டணி முறிவு! பின்னணி என்ன?
By
Web team
September 26, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! சினிமா ஷூட்டிங் முடிந்துவிட்டதால் அரசியல் ஷூட்டிங்கிற்கு தயாராகிறாரா கமல்?
By
Web team
September 25, 2023