திருச்செங்கோடு அருகே விபத்தில் சிக்கிய நபரின் வாகனத்தில் இருந்த 1லட்சத்து 45ஆயிரம் ரூபாயை மீட்டு காவல்துறையினர் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.
திருச்செங்கோடு அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற, கண்ணன் என்பவர் விபத்தில் சிக்கினார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற நகர காவல்துறையினர் அவரது வாகனத்தை சோதனையிட்ட போது டேங்க் கவரில் ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 170ரூபாய் இருப்பது தெரிய வந்தது. இந்தப் பணத்தை கண்ணன் குடும்பத்தினரிடம் காவல்துறையினர் ஒப்படைத்தனர். விபத்தில் சிக்கிய நபரின் உடமைகளை பத்திரமாக மீட்டு ஒப்படைத்த காவலர்களுக்கு திருச்செங்கோடு காவல் துணை கண்காணிப்பாளர் பாராட்டுக்களை தெரிவித்தார்.