கன்னியாகுமரி வாக்குசாவடி மையங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு

கன்னியாகுமரி தொகுதியில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் ஓட்டு இயந்திரங்கள் வாக்குசாவடி மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்குட்பட்ட கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் 310 வாக்கு சாவடிகள் உள்ளன. இந்த வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரம் அனுப்பும் பணி நடைபெற்றது. கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 825 ஆண் வாக்காளர்களும், ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 227 பெண் வாக்காளர்களும், 73 மூன்றாம் பாலினத்தவர்களும் உள்ளனர்.

இவர்கள் அனைவரும் வாக்களிக்கும் விதமாக பூதப்பாண்டி வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

Exit mobile version