காவல் துறை அமைச்சு பணியாளர்களின் விளையாட்டு போட்டிகள் – 20 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் தொடங்கியது

தமிழ்நாடு காவல் துறையின் அமைச்சு பணியாளர்கள் பங்கேற்கும் விளையாட்டு போட்டிகள், 20 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

சோழிங்கநல்லூர் அடுத்துள்ள செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரியில் தொடங்கிய இந்த போட்டிகளை காவல்துறை இணை ஆணையர் மகேஸ்வரி, புறாக்களை பறக்கவிட்டு தொடக்கி வைத்தார்.

அமைச்சுப் பணியாளர்களின் பணிச்சுமை காரணமாக ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்கும் விதமாக இப்போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் 500-க்கும் மேற்பட்ட ஆண், பெண் பணியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். கபடி, இறகு பந்து, கூடைப்பந்து, கைப்பந்து உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

இறுதி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, சென்னை மாநகர காவல் ஆணையர் பரிசுகளை வழங்க உள்ளார்.

Exit mobile version