விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் வேட்புமனு பரீசிலனை நடைபெறும் பகுதிக்கு செல்லவிடாமல் அதிமுக வேட்பாளர்கள காவல்துறை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் வார்டு கவுன்சிலர் வேட்பாளர்களின் வேட்புமனு பரிசீலனை நடைபெற்ற நிலையில், அதில் பங்கேற்க அனைத்து கட்சி வேட்பாளர்களும் தேர்தல் அதிகாரிகள் ஒப்புதல் சீட்டு வழங்கி இருந்தனர்.
இந்நிலையில் தேர்தல் அலுவலகம் அருகே 200 மீட்டர் தொலைவில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்ட நிலையில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் வாக்குவாதம் ஏற்பட்டது.
திமுக வேட்பாளர்களை மட்டும் மாற்று வழியில் அனுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அதிமுக வேட்பாளர்களை குறி வைத்து தடுத்த காவல்துறையினருடன் முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதையடுத்து அதிமுக வேட்பாளர்கள் தேர்தல் அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.
Discussion about this post