காஷ்மீரில் நடைபெற்ற ஸ்கேட்டிங் பயிற்சி முகாமில் ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் பங்குபெற்று பயிற்சி பெற்றனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் குறித்த தவறான பரப்புரை பிரசாரங்களை முறியடிக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு உத்திகளை பயன்படுத்தி வருகின்றனர். அதன் ஒருபகுதியாக லே நகரில் மாவட்ட காவல்துறை சார்பில் சிறுவர்களுக்கான ஸ்டேட்டிங் பயிற்சி முகாம் நடத்தப்பட்டன.
இதில் ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்று பயிற்சி பெற்றனர். இறுதியாக பயிற்சி முடித்தவர்களுக்கு லே மாவட்ட காவல்துறை சார்பில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.