காவல்துறை அதிகாரிகள் தவறுகளில் ஈடுபட கூடாது எனவும், அவ்வாறு ஈடுபட்டால் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே. விஸ்வநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் புதிதாக பொருத்தப்பட்டுள்ள 437 சிசிடிவி கேமாராக்களை சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் ஏ.கே. விஷ்வநாதன் தொடக்கி வைத்தார்.சென்னை, கீழ்ப்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலை ஈகா திரையரங்கம் முதல் கோயம்பேடு மேம்பாலம் வரையிலான சுமார் 9.5 கீ.மீ. தொலைவிற்கு புதிதாக 437 சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.இதனை சென்னை மாநகர காவல் ஆணையாளர் விசுவநாதன் இன்று துவக்கி வைத்தார். சென்னை ஈகா திரையரங்கம் மற்றும் அண்ணா ஆர்ச் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் கண்காணிப்பு கேமாராக்களின் செயல்பாட்டை தொடக்கி வைத்தார்.
பின்னர் பேசிய சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே. விஸ்வநாதன்,அதிக வணிக வளாகங்கள் மற்றும் கட்டிடங்கள் உள்ள சாலைகளில் தொடர்ந்து சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். இதன் ஒரு கட்டமாக இன்று 10 கி.மீ தொலைவிற்கு இந்த கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.தற்போது சிசிடிவி கேமாராக்கள் மூலம் குற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்டு குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக குற்றங்கள் பெரும் அளவில் குறைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.இதுவரையில் 60 % அளவில் சென்னை முழுவதும் சிசிடிவி கேமாராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் வரும் காலங்களில் மேலும் அதிகரிக்கப்படும் என்று அவர் அப்போது தெரிவித்தார்.காவல்துறை அதிகாரிகள் தவறுகளில் ஈடுப்பட கூடாது என்று அறிவுறுத்திய அவர் அப்படி ஈடுப்படுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
Discussion about this post