நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக கொல்கத்தா காவல்துறை ஆணையர் ராஜீவ் குமார் சிபிஐ முன்பாக இன்று ஆஜராகிறார். சராதா நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக கொல்கத்தா காவல்துறை ஆணையர் ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்த சென்ற சிபிஐ அதிகாரிகள் சிறை பிடிக்கப்பட்டனர். இதை தொடர்ந்து சிபிஐக்கு எதிராக மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த விவகாரம் தொடர்பாஜ சிபிஐ உச்ச நீதிமன்றத்தை நாடியது.
அப்போது, ராஜீவ் குமாரை சிபிஐ முன்பாக ஆஜராக உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், அவரை கைது செய்யக் கூடாது என சிபிஐக்கு தடை விதித்தது. அதன்படி, சிபிஐ அதிகாரிகள் முன்பாக ராஜீவ் குமார் இன்று ஆஜராகவுள்ளார். மேகாலயா மாநிலத்தின் சில்லாங்கில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது.