காவல் உதவி ஆய்வாளரின் கை துண்டிக்கப்பட்ட சம்பவம் : அறுவை சிகிச்சைக்கு பின் கை இணைக்கப்பட்டது!

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் ஏற்பட்ட தகராறில், துண்டிக்கப்பட்ட காவல் உதவி ஆய்வாளரின் கை, அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக இணைக்கப்பட்டது. பாட்டியாலா பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறி காரில் சென்றவர்களுக்கும், காவல்துறையினருக்கும் நேற்று தகராறு ஏற்பட்டது. அப்போது, காரில் இருந்தவர்கள் வாளால் வெட்டியதில் காவல் உதவி ஆய்வாளர் ஹர்ஜீத் சிங்கின் கை துண்டானது. இதையடுத்து அவர் சண்டிகர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர் ரமேஷ் சர்மா தலைமையில் சுமார் 7 மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சைக்கு பின், துண்டிக்கப்பட்ட ஹர்ஜீத் சிங்கின் கை, வெற்றிகரமாக இணைக்கப்பட்டது. துண்டிக்கப்பட்ட கையில் இருந்த நரம்புகள் நல்ல நிலையில் இருந்ததால் கையை மீண்டும் அறுவை சிகிச்சை மூலம் இணைக்க முடிந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Exit mobile version