போலீஸ் என பணம் பறிக்கும் நபரை கைது செய்தது போலீஸ்

சாலையில் போவோர் வருவோரிடம் போலீஸ் என , பணம் பறிக்கும் கொள்ளையனை போலீசார் கைதுசெய்துள்ளனர்.

சென்னை அடுத்த மதனந்தபுரத்தை சேர்ந்தவர் கந்தவேல். இவர் மதனந்தபுரத்தில் இருந்து ஆட்டோவில் ஏறி, போரூர் சென்றுள்ளார். அப்போது ஆட்டோ டிரைவரின் சீட்டில் மர்மமான முறையில் இன்னொரு நபர் அமர்ந்திருந்துள்ளார்..

பாதிவழியில் அந்த மர்ம நபர் தன்னை போலீஸ் என கூறி, மதுரவாயல் பைப்பாஸ் சர்வீஸ் சாலை பகுதிக்கு அழைத்து சென்று மிரட்டியுள்ளார். கந்தவேல் கையில் அணிருந்த இரண்டு தங்க மோதிரத்தை பறித்துக்கொண்டு துரத்திவிட்டுள்ளார்.

பின்னர் கந்தவேல் மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனை அடுத்து போலீசார் விசாரனையில் அங்கு இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து ஆட்டோ டிரைவரை பிடித்து விசாரித்தனர்.

தன்னை போலீஸ் என்று கூறிய அந்த மர்மநபர், ஒரு நாள் முழுதும் ஆட்டோவை வாடகைக்கு எடுத்து சுற்றியதாக டிரைவர் தெரிவித்தார்.பின்னர் இருவரும் கூறிய அடையாளத்தை வைத்து விசாரித்ததில் அவர் திருநின்றவூரை சேர்ந்த மகேஷ் என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் அவர் பறித்து சென்ற இரண்டு தங்க மோதிரத்தை பறிமுதல் செய்தனர். போலீஸ் உடை அணிந்துக்கொண்டோ அல்லது அணியாமலோ உலா வரும் இவர், தன்னை போலீஸ் என கூறி பொதுமக்களிடம் பணம் பறிப்பதை வாடிக்கையாக கொண்டிருந்துள்ளார்.

மேலும் மகேஷ் மீது சென்னை முழுதும் உள்ள பல காவல் நிலைங்களில் இது போன்ற பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது. அவர் 25 வருடத்திற்கு மேலாக இது போன்று சம்வங்களில் ஈடுப்பட்டு வருதும் தெரியவந்தது…..

Exit mobile version