ஊரடங்கை மீறியதாக பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் திரும்ப பெற்றுக் கொள்ள காவல்துறை அறிவிப்பு!

ஊரடங்கை மீறியதாக கடந்த மார்ச் 24 ம் தேதி முதல் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை, அதன் உரிமையாளார்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக காவல்துறை அறிவித்துள்ளது. ஊரடங்கு நடைமுறையின் போது கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள், தினசரி காலை 7 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வழங்கப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு 30 நிமிடங்களுக்கு ஒரு முறை 10 பேருக்கு என, வாகனங்கள் திரும்ப ஒப்படைக்கப்படும் என்றும், இந்த தருணத்தில் சமூக இடைவெளியை பின்பற்றுவது அவசியம் எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் எப்.ஐ.ஆர் பதிவு செய்த வரிசைப்படி, அந்தந்த காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வழங்கப்படும் என்றும், அப்போது, வாகன உரிமையாளரின் அசல் ஓட்டுநர் உரிமம் மற்றும் நகல், வாகன ஆர்.சி.புத்தகத்தின் அசல் மற்றும் நகலை கொண்டு வரவும், காவல்துறை வலியுறுத்தியுள்ளது.

Exit mobile version