விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னையில் 2 ஆயிரத்து 600 விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்த காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.
விநாயகர் சதுர்த்தி பண்டிகை நாளை மறுநாள் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னையில் 2 ஆயிரத்து 600 விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டும் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்த காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னையில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாகவும், செப்டம்பர் 5, 7, 8 ஆகிய தேதிகளில் காசிமேடு, பட்டினம்பாக்கம், எண்ணூர், திருவெற்றியூர், நீலங்கரை உள்ளிட்ட 6 இடங்களில் கரைக்க அனுமதி வழங்கி மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவுவிட்டுள்ளார். சிலை கரைக்கும் இடங்களில் கிரேன்கள், உயிர் காக்கும் குழுக்கள், மருத்துவ குழுக்கள் என பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.