பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தனியார் ஆம்னி பேருந்துகள் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்து நெரிசல் இல்லாமல் பேருந்துகளை இயக்குவது குறித்து, போக்குவரத்து காவல்துறை கூடுதல் ஆணையர் அருண் தலைமையில் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சென்னை வேப்பேரியில் உள்ள காவல்துறை ஆணையர் அலுவலத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து போக்குவரத்துக் கழக நிர்வாகிகள் மற்றும் ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு, வடக்கு மண்டல போக்குவரத்து காவல்துறை இணை ஆணையர் ஜெயகௌரி ஆலோசனைகளை வழங்கினார். எந்தெந்த வழித்தடங்களில் போக்குவரத்து செல்ல வேண்டும், சாலை விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் குறித்து விளக்கினார்.