குழந்தைகளுக்கு எதிரான கொடூரமான குற்றங்களுக்கு, மரண தண்டனை விதிக்கும் வகையில், திருத்தம் செய்யப்பட்ட போக்சோ சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க, போக்சோ சட்டத்தின் கீழ் அளிக்கப்படும் தண்டனைகளை அதிகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக, மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கூறியுள்ளார்.
கொடூரமான பாலியல் வன்கொடுமைகளுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையிலும், பல குற்றங்களுக்கான தண்டனைகளை அதிகாரிக்கும் வகையிலும் வழிவகை செய்யப்பட்டிருப்பதாக விளக்கினார். சிறுவர், சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு தண்டனை விதிக்க, கடந்த 2012ல் போக்சோ சட்டம் கொண்டு வரப்பட்டது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் கத்வா பகுதியில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய, இந்த சம்பவத்தை தொடர்ந்து போக்சோ சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது.