அருண் ஜேட்லி இல்லத்திற்கு சென்று பிரதமர் மோடி ஆறுதல்

மறைந்த முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி இல்லத்திற்கு சென்ற பிரதமர் மோடி அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்

உடல்நலக்குறைவு காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அருண் ஜெட்லி கடந்த ஆகஸ்ட் 24 ஆம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. அரசுமுறைப் பயணமாக வெளிநாடுகளுக்கு சென்ற பிரதமர் மோடியால் ஜேட்லியின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள முடியவில்லை. இந்நிலையில் இன்று நாடு திரும்பிய பிரதமர் மோடி அருண் ஜேட்லியின் வீட்டிற்கு சென்று அவரது உருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அருண்ஜேட்லியின் குடும்பத்தினரை சந்தித்த மோடி அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

Exit mobile version