பிரதமரின் நினைவுப் பரிசுகள் ஏலம் விட காரணம் இதோ.!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி. இதுவரை அரசு முறை பயணமாக வெளிநாடுகளுக்கு பல முறை சென்றுவந்துள்ளார்.அந்த பயணத்தின் போது, அங்குள்ள உள்நாட்டின் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார். அப்போது அவர்க்கு கிடைத்த நினைவுப் பரிசுகள் ஏராளம். அந்த நினைவுப் பரிசுகளை ஏலம் விட்டு மத்திய அரசு பல லட்சம் வருவாய்க்கு வருமானம் ஈட்டும். அதை கங்கை தூய்மை திட்டத்திற்காக செலவு செய்யப்படுவார்கள்.

அதே போன்று, கடந்த ஜனவரி மாதத்தில் இதே போன்று பிரதமரின் நினைவுப் பொருட்கள் ஏலம் விடப்பட்டன. அப்போது, 14 நாட்கள் நடந்த ஏலத்தில் சுமார் 1,800 பொருட்கள் வைக்கப்பட்டன. அதில் எவ்வளவு வருவாய் வந்தது என்று இதுவரை அதிகாரபூர்வமான தகவல் மத்திய அரசு தரவில்லை.

தற்போது, கடந்த கடந்த ஜனவரி மாதத்திர்க்கு பிறகு அரசு முறை பயணமாக வெளிநாடுகளுக்கு சென்ற மோடிக்கு கிடைத்த நினைவுப் பரிசுகள் ஏலம் விட மத்திய அரசு திட்டம் திட்டப்பட்டுள்ளது.

அதன் படி மத்திய அமைச்சர் மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் பிரகலாத் படேல் பேசுகையில் , “ மோடியின் உருவப்படம் முதல் கலைப்படைம், தலைப்பாகைகள், சால்வைகள், வாள்கள் மற்றும் மத சிலைகள் என மொத்தம் 2,772 பொருள்கள் புது தில்லியில் உள்ள National Gallery of Modern Art இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதில் கிடைக்கும் வருவாயை கங்கை தூய்மை திட்டத்திற்காக செலவு செய்யப்படும் ”என்று தெரிவித்தார்.

இந்த நிகழ்வு, ஆன்லைனில் மூலம் நடத்தப்படும். வரும் செப்டம்பர் 14 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் மூன்றாம் தேதி வரை நடைபெறுகிறது என்று தெரிகிறது

Exit mobile version