பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு 7 வேண்டுகோளை விடுத்துள்ளார்!

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களுக்கு 7 வேண்டுகோளை விடுத்துள்ளார். வீட்டில் இருக்கும் முதியோர்களின் நலனில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும் என்றும், தனி மனித இடைவெளியை கடைபிடிப்பது அவசியம் என்றும், மக்கள் வெளியே செல்லும் போது முக கவசத்தை கட்டாயம் அணிய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார். உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுப் பழக்கத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள பிரதமர், ஆயுஷ் அமைச்சகத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என்றும், முடிந்தவரை ஏழை மக்களுக்கு உதவிகள் செய்ய வேண்டும் எனவும் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். சக பணியாளர்களிடம் கனிவுடன் நடந்து கொள்வதுடன், ஆள் குறைப்பிலும் ஈடுபடக் கூடாது என்று கேட்டுக் கொண்டுள்ள பிரதமர் மோடி,  மருத்துவர்கள், தூய்மை பணியாளர்கள், காவல்துறையினரின் சேவைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Exit mobile version