பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபரை இந்திய பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளோடு பிரமாண்ட வரவேற்பு அளிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
இந்தியா, சீனா இடையேயான நல்லுறவை மேம்படுத்தும் விதமாக, பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின் பிங், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரத்தில் சந்தித்து பேசவுள்ளனர். இதற்காக, வரும் 11 ஆம் தேதி சென்னை விமான நிலையத்திற்கு வருகை தரும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை வரவேற்க பல்வேறு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
விமான நிலையத்தில் இருந்து, கிண்டியில் இருக்கும் தனியார் நட்சத்திர விடுதிக்கு செல்லும் வழியில் ஜி ஜின்பிங்கை வரவேற்க, கரகாட்டம், தப்பாட்டம், துடும்பாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கிண்டி எம்.எஸ்.எம்.இ அலுவலகம் அருகே தென்னக பண்பாட்டு மையம் சார்பாக தப்பாட்டம் கலை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. கலை பண்பாட்டுத் துறை சார்பாக, கிண்டியில் உள்ள தனியார் விடுதியின் நுழைவு வாயிலில் நாதஸ்வரம் மற்றும் தவில் இசையுடன் கூடிய வரவேற்பும் அளிக்கப்படுகிறது.
ஓய்விற்குப் பின், தனியார் விடுதியில் இருந்து மாமல்லபுரம் புறப்படும் போது, சீன அதிபருக்கு நாதஸ்வரம் மற்றும் தவில் இசையுடனான சிறப்பு வரவேற்பு நிகழ்ச்சியும், தொடர்ந்து ஓ.எம்.ஆர்., பல்லவரம் ரேடியல் சந்திப்பில், சிறப்புமிக்க ராஜஸ்தான் சக்ரி மற்றும் கல்பெலிய நடனமும், சிறப்பு மிக்க மத்தியபிரதேச நடனமான பாதேய் மற்றும் பாரேடி நடனத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கானத்தூர், மாயாஜால் திரையரங்கு எதிரில், சிறப்பு மிக்க பஞ்சாபிய நடனமான பாக் கூமர் மற்றும் ஒடிசாவில் புகழ்பெற்ற நடனமான சாம்பல்புரி நடனத்திற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இதேபோல், மாமல்லபுரத்தில் உள்ள தாஜ் ஹோட்டல் அருகே, கலை பண்பாட்டுதுறை சார்பாக தப்பாட்டமும், திருவிடந்தை அருகே தென்னக பண்பாட்டு மையம் சார்பாக பஞ்ச வாத்தியமும் இசைக்கப்படுகிறது. மேலும், சீன அதிபருக்கு நெம்மேலி அருகே கர்நாடக சிறப்பு நடனமான தொல்லு குனிதா கலை நிகழ்ச்சியோடு, புலிக்குகை மற்றும் மாமல்லபுரம் பேரூராட்சி அலுவலகம் அருகே, கலை பண்பாட்டுத் துறை