பிரதமர் மோடியின் விமானம் பாகிஸ்தான் வான்வழியில் பறக்க அந்நாட்டு அரசு அனுமதி மறுத்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபைக் பொது கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி வருகிற 21ஆம் தேதி அமெரிக்கா செல்கிறார். மோடியின் அமெரிக்க பயணத்திற்கு பாகிஸ்தான் வான்வழியை பயன்படுத்த அனுமதி வழங்க வேண்டும் என பாகிஸ்தானிடம், இந்தியா முறைப்படி கோரிக்கை விடுத்தது. இந்த நிலையில், இந்தியாவின் கோரிக்கையை பாகிஸ்தான் நிராகரித்துள்ளது. பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி, பிரதமர் மோடியின் விமானம் பாகிஸ்தான் வான்வழியில் பறக்க அனுமதி வழங்கப்படாது எனத் தெரிவித்துள்ளார். காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு, பாகிஸ்தான் இந்தியாவுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது. முன்னதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் விமானம் பாகிஸ்தான் வான்வழியில் பறக்கவும் அந்நாட்டு அரசு தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.