நீர் பாதுகாப்புக்கு இந்தியா அதிக முன்னுரிமை வழங்குவதாக ஐநா பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நியூயார்க்கில், ஐ.நா பருவநிலை மாற்றத்திற்கான பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, உலக சுற்றுச் சூழலை பாதுகாக்க உலக நாடுகள் ஓர் அணியில் திரள வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். இந்தியா, பிளாஸ்டிக் பொருட்களுக்கு முற்றிலும் தடை விதித்துள்ளதாக தெரிவித்த பிரதமர் மோடி, கோடிக்கணக்கான குடும்பங்களுக்கு சுத்தமான சமையல் எரிவாயு இணைப்புகளை வழங்கியுள்ளதாக கூறினார். அதே போன்று,’ஜல் ஜீவன்’ திட்டம் மூலம், நீர் வள மேம்பாடு, நீர் பாதுகாப்பு மற்றும் மழைநீர் சேகரிப்பு பணிகளை இந்தியா தொடங்கியுள்ளதாக தெரிவித்தார்.