துல்லிய தாக்குதல் என்ற பெயரில் நாடகம் அரங்கேற்றியுள்ள பிரதமர் மோடி, இதன் மூலம் இந்திய ராணுவத்தை இழிவுபடுத்தியுள்ளார் என, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.
டெல்லியுள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராகுல்காந்தி, பிரதமர் மோடி நாட்டின் முப்படைகளை தனது தனிப்பட்ட தேவைகளுக்காக பயன்படுத்துவதாக குற்றம் சாட்டியுள்ளார். தொடர்ந்து பேசிய ராகுல்காந்தி, 2 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்பு உறுவாக்கி தரப்படும் என்ற வாக்குறுதி என்னவாயிற்று என பிரதமருக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
தீவிரவாதி மசூத் அஸ்சாருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், தீவிரவாதத்திற்கு தலை குணிந்து மசூத் அஸ்சாரை பாகிஸ்தான் நாடு கடத்தியது பாஜக அரசுதான் எனவும் குற்றம் சாட்டினார். ரபேல் போர் விமான ஊழலில் பிரதமர் மோடி அரசின் உழலை காங்கிரஸ் தொடர்ந்து விமர்சிக்கும் எனவும் ராகுல்காந்தி குறிப்பிட்டார்.