பிரதமர் மோடி, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக 3 நாட்கள் சுற்றுப் பயணமாக இன்று தாய்லாந்து செல்கிறார்
தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான்-ஒவின் அழைப்பை ஏற்று செல்லும் பிரதமர் மோடி, ஆசியான்-இந்தியா, கிழக்கு ஆசியா, பிராந்திய அளவிலான விரிவான பொருளாதார ஒத்துழைப்பு மாநாடுகளில் கலந்து கொள்கிறார். ஆசியன் அமைப்பைச் சேர்ந்த புரூனே, கம்போடியா, இந்தோனேஷியா, மலேசியா உள்ளிட்ட 10 நாடுகள் மற்றும் அவற்றின் பொருளாதார கூட்டாளிகளாக திகழும் இந்தியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட 6 நாடுகள் இடையே நடைபெறும் பிராந்திய அளவிலான விரிவான பொருளாதார ஒத்துழைப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதைத்தொடர்ந்து தாய்லாந்து பயணத்தை முடித்துக் கொண்டு வரும் 4ம் தேதி பிரதமர் மோடி இந்தியா திரும்புவார் என வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.