கொல்கத்தாவில் புதுப்பிக்கப்பட்ட 4 பாரம்பரியமிக்க கட்டடங்களை பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
கொல்கத்தா துறைமுக சபையின் 150வது ஆண்டு விழா இன்றும், நாளையும் கொண்டாடப்படுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி இன்று கொல்கத்தா வந்தடைந்தார். பின்னர், பாரம்பரியமிக்க புதுப்பிக்கப்பட்ட 4 கட்டடங்களை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணம் செய்து உரையாற்றினார். கொல்கத்தாவிலுள்ள பழைய கரன்சி கட்டடம், பெல்வேடியர் இல்லம், மெட்கால்ஃப் இல்லம் மற்றும் விக்டோரியா நினைவரங்கம் ஆகிய 4 பாரம்பரியமிக்க புதுப்பிக்கப்பட்ட கட்டடங்களை பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். இதையடுத்து, நடைபெற்ற கலை நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.