செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள ஐ.நா. சபை பொதுகூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி அமெரிக்கா செல்வார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
ஐ.நா சபைக் பொதுகூட்டம் செப்டம்பர் மாதம் 20 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதிவரை நடைபெற உள்ளது. நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில், செப்டம்பர் 23 ஆம் தேதி நடைபெறும் அமர்வில் பிரதமர் மோடி பங்கேற்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அமெரிக்கா செல்லும் மோடி, செப்டம்பர் 22 ஆம் தேதி ஹூஸ்டன் அல்லது சிகாகோ நகரில், அமெரிக்க வாழ் இந்தியர்கள் ஏற்பாடு செய்து இருக்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளதாக கூறப்படுகிறது.
எரிசக்தி நிறுவனங்கள் அதிகம் உள்ள ஹூஸ்டன் நகரிலேயே கூட்டம் நடைபெறும் எனத் தெரிகிறது. அமெரிக்க அதிபர் டிரம்பையும் அவர் சந்திப்பார் எனக் கூறப்படுகிறது. பிரதமராக இரண்டாவது முறையாக மோடி பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக அமெரிக்காவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.