அரசு முறை பயணமாக செப்டம்பர் 4ம் தேதி ரஷ்யாவிற்கு செல்கிறார் பிரதமர் மோடி

இரண்டு நாள் அரசு முறை சுற்றுபயணமாக, செப்டம்பர் 4ம் தேதி பிரதமர் மோடி ரஷ்யாவிற்கு செல்கிறார்.

இந்த பயணத்தின் போது, கூடங்குளம் தவிர இந்தியாவில் மேலும் 6 இடங்களில் அனு உலைகள் அமைப்பதற்கான இறுதி ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து, இந்தியாவிற்கான ரஷ்யா தூதர் நிகோலே குதாஷேப் டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, வருகிற 4 ஆம் தேதி ரஷ்யா செல்லும் பிரதமர் மோடி, விளாடிவோஸ்டாக்கில் நடைபெறும் கிழக்கு பிராந்திய பொருளாதார மாநாட்டில் பங்கேற்கவுள்ளதாக கூறியுள்ளார். அதனை தொடர்ந்து ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதினுடன், பிரதமர் மோடி பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Exit mobile version