69 வது பிறந்தநாளைக் கொண்டாட குஜராத் சென்றுள்ள பிரதமர் மோடி

பிரதமர் மோடி 69 வது பிறந்தநாளையொட்டி குஜராத் சென்றுள்ள நிலையில் முழுக் கொள்ளளவை எட்டியுள்ள சர்தார் சரோவர் அணையைப் பார்வையிடுகிறார்.

பிரதமர் மோடி 69 வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதையடுத்து தன்னுடைய சொந்த மாநிலமான குஜராத் சென்றுள்ள அவர் உலகின் மிகப்பெரிய அணைகளில் ஒன்றான சர்தார் சரோவர் அணையைப் பாரையிடுகிறார். நர்மதை நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சர்தார் சரோவர் அணை உலகின் மிகப்பெரிய அணைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. 138 புள்ளி 68 மீட்டர் உயரம் கொண்ட சரோவர் அணை அதன் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது. பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு சர்தார் சரோவார் அணைப்பகுதியில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அணையானது வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version