மாநில முதலமைச்சர்களுடன் வரும் 16,17- ல் பிரதமர் மோடி ஆலோசனை!!

பிரதமர் நரேந்திர மோடி வரும் 16 மற்றும் 17ம் தேதிகளில் அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.

மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா வைரசின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், நாடு முழுவதும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மூன்று லட்சத்தை கடந்துள்ளது. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் வரும் 16 மற்றும் 17ம் தேதிகளில், காணொலி காட்சியில் ஆலோசனை நடத்துகிறார். கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை, ஊரடங்கு உள்ளிட்டவை குறித்து அவர் ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஜூன் 16ம் தேதி பஞ்சாப், அசாம், கேரளா உள்ளிட்ட மாநில முதலமைச்சர்களுடனும், 17ம் தேதி தமிழ்நாடு, மகாராஷ்டிரா, டெல்லி உட்பட 15 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version