முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி இரண்டு நாட்கள் ஆலோசனை!

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இன்றும், நாளையும், அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதை தடுப்பது தொடர்பான நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில் மாநிலங்களின் தற்போதை நிலை மற்றும் வருங்காலங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிய உள்ளார். அதன்படி, காணொலி காட்சி மூலம் பஞ்சாப், கேரளா, கோவா உள்ளிட்ட 21 மாநிலங்களை சேர்ந்த முதலமைச்சர்கள், துணை நிலை ஆளுநர்கள், நிர்வாக அதிகாரிகளுடன் இன்று கலந்துரையாடுகிறார். மகாராஷ்டிரா, கர்நாடகா, டெல்லி, தமிழ்நாடு உள்ளிட்ட 15 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நாளை ஆலோசனை நடத்துகிறார்.

Exit mobile version