22ம் தேதி பொருளாதார நிபுணர்களை சந்திக்க உள்ளார் பிரதமர் மோடி

நாட்டின் பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்புகளை அதிகரித்தல் உள்ளிட்டவை குறித்து விவாதிப்பதற்காக 22ம் தேதி பொருளாதார நிபுணர்களை பிரதமர் மோடி சந்திக்க உள்ளார்

நாட்டின் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டின் கடைசி 3 மாதங்களில் 5.8 சதவீதம் சரிந்துள்ளது. நடப்பு நிதியாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியும் 6.1 சதவீதம் சரிந்துள்ளது. இதேபோல், வேலைவாய்ப்பின்மை கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 6.1 சதவீதமாகவும் உள்ளது. இந்நிலையில், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பது மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்குவது ஆகியவற்றை கருத்தில் கொண்டு, பொருளாதார நிபுணர்கள் கூட்டத்திற்கு, நிதி ஆயோக் அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. பிரதமர் இல்லத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில், நிதி ஆயோக் அதிகாரிகள், அமைச்சர்கள், பொருளாதார நிபுணர்கள், தொழிலதிபர்களை பிரதமர் மோடி சந்திக்க உள்ளார். ஜூலை 5ம் தேதி, தனது முதல் பட்ஜெட்டை நிதியமைச்சராக உள்ள நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ள நிலையில் இந்தக் கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version