அரிய வகை அனீமியா நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஆக்ராவைச் சேர்ந்த ஏழைச் சிறுமிக்கு பிரதமர் நரேந்திர மோடி, 30 லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்துள்ளார்
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவை சேர்ந்த சுமர்சிங் என்பவரின் மகள் லலிதா, அப்பிளாஸ்டிக் அனீமியா என்ற ரத்த சோகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இது ஒரு அரிய வகை நோயாகும். தீராத ரத்தப் போக்கையும் தொற்று நோயையும் இது உருவாக்க கூடியது. 7 லட்சம் ரூபாய் செலவு செய்தும் மகளின் நோயை குணப்படுத்த முடியாமல் தவித்து வந்த சுமர்சிங், இதுகுறித்து பிரதமர் மோடியிடம் உதவி கேட்டு கடிதம் எழுதியிருந்தார். இதனை ஏற்றுக்கொண்ட பிரதமர் அலுவலகம், மோடியின் உத்தரவு கிணங்க 30 லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்துள்ளது. பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து சிறுமியின் சிகிச்சைக்கு நிதி அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சுமர்சிங் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.